ஜெர்மனியில் பல நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

மத்திய ஐரோப்பாவில் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.ஆஸ்திரியா, ஜெர்மனி, மற்றும் சென் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் பல இடங்களில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில், அவசரநிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மண்சரிவுகளிலும் வெள்ளத்திலும் சிக்கி குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 8 பேர் காணாமல்போயுள்ளனர்.ஜெர்மனியில் ஈலன்பர்க் நகரில் 7 ஆயிரம் பேர்வரையில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.செக் தலைநகர் பராகுவேயில் வெள்ளநீர் பெருக்கெடுக்கும் அபாயமுள்ளதால் அவதானமாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பராகுவே மற்றும் அண்டிய பிரதேசங்களில் 3000 பேர் வரையில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.பராகுவே வன-உயிர் காட்சிச் சாலையிலிருந்த உயிரினங்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய ஐரோப்பாவின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் இரண்டு மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

ஜெர்மனியில் பல நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பாவில் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆஸ்திரியா, ஜெர்மனி, மற்றும் சென் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் பல இடங்களில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில், அவசரநிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மண்சரிவுகளிலும் வெள்ளத்திலும் சிக்கி குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 8 பேர் காணாமல்போயுள்ளனர்.

ஜெர்மனியில் ஈலன்பர்க் நகரில் 7 ஆயிரம் பேர்வரையில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

செக் தலைநகர் பராகுவேயில் வெள்ளநீர் பெருக்கெடுக்கும் அபாயமுள்ளதால் அவதானமாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பராகுவே மற்றும் அண்டிய பிரதேசங்களில் 3000 பேர் வரையில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பராகுவே வன-உயிர் காட்சிச் சாலையிலிருந்த உயிரினங்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய ஐரோப்பாவின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் இரண்டு மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

ஜெர்மனியில் பல நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply