சேது சமுத்திரத்திட்டத்திற்காக மாநிலம் தழுவிய போராட்டம் – கருணாநிதி அறிவிப்பு

சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமென வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி  அறிவித்துள்ளார். கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழா நேற்று (03.06.2013) நடந்தது. அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கருணாநிதி, ‘சேதுசமுத்திரத் திட்டம் நலம் பயக்கும், தமிழகம் செழிக்கும், அதைப் பல்வேறு காரணங்களைச் சொல்லி கிடப்பில் போட்டிருக்கின்றனர்’ என்று கூறினார்.

‘அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிக்காவிடில் தோழமைக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு திமுக பெரும் போராட்டத்தில் இறங்கும்’ என்று அவர் எச்சரித்தார்.

கருணாநிதிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக கட்சித் தொண்டர்களும் பல இடங்களிலும் சிறப்புக் கொண்டாட்டங்களை நடத்தியிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply