வட மாகாண தேர்தல்: வாக்காளர் பதிவு சட்டமூலம் இன்று ஆராய்வு
வட மாகாண தேர்தலை நடத்துவதற்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (4) உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்பட உள்ளது. வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அரசிய லமைப்பிற்கு அமைவானதா, இல்லையா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் இன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சந்தியா ஹெட்டிகே ஆகிய நீதியரசர் குழு முன் ஆராயப்பட உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட உள்ளது.
இதேவேளை, வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அவசர சட்டமூலமாக எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வட மாகாணத்தில் வாழ்ந்த மக்கள் தாம் 1983 ஆம் ஆண்டிற்கு முன் வாழ்ந்த இடங்களில் இருந்து வாக்களிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply