சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி மேம்பாட்டிற்கானது – அமெரிக்கா

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக செய்துக்கொள்ளப்பட்டதொன்றாகும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. திருகோணமலை நகரசபையின் கீழ் இயங்கும் திருகோணமலை பொது நூலகத்தில் அமெரிக்க நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

திருகோணமலை நகரசபையின் தலைவரும் இலங்கைக்கான அமெரிக்க நிலையத்திற்கான பணிப்பாளர் கிருஸ்கோபர் ஸ்டீல் ஆகியோருமே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்வதற்காகவும் நூலகத்தில் வாசிப்பில் ஈடுபடுபவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை வளர்க்கும் செயற்பாடுகளும் தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கிடையே சமாதானத்தையும் சமத்துவத்தையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் இந்த அமெரிக்க நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கண்டி மாநாகர சபையுடன் இணைந்து கண்டி பொது நூலகத்தில் 2005 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டும் இதேபோன்ற நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply