அஜித் மன்னப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

மேல் மாகாண சபை உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேல் மாகாண சபை உறுப்பினரான அஜித் மன்னப்பெரும  2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 44,612 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply