ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்தியுள்ளது

ஈரான் அணுஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி, அதன் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்றாலும் பொருளாதாரத் தடையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது விதித்துள்ளது. இதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இது வரை இல்லாத வகையில் ஈரானின் பணமதிப்பை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் ஈரானின் பணமதிப்பில் கடும் சரிவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இது தவிர ஈரானின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வாகன உற்பத்திதுறையை குறிவைத்து மற்றொரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களை வேறு நிறுவனங்கள் ஈரானிடம் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

ஈரானில் இந்த மாதம் 14-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா இந்த புதிய தடைகள் விதித்திருப்பது ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply