இலங்கை நிலைமைகள் குறித்து சொல்ஹெய்ம் ​தொடர்ந்தும் கண்காணிக்கிறார்

இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.  தற்போது சமாதானத் தூதுவர் பதவி வகிக்காத போதிலும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் புலம்பெயர் மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான செய்திகளை வாசிப்பதாகவும், மக்களை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply