இன ரீதியாக பாட சாலைகளுக்கு முற்றுப் புள்ளி – பந்துல பெருமிதம்

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாட சாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எந்த அரசாங்கப் பாடசாலையிலும் தற்போது இன, ரீதியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என உறுதியாகத் தெரிவித்த அவர், இனி இன ரீதியாக பாடசாலைகள் உருவாக் கப்படுவது நிறுத்தப்படுவது டன் சகல பாடசாலைகளி லும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரி வித்தார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் நிலவும் ஆசிரி யர் பற்றாக்குறைகளை தீர்க்கும் வகையில் ஆசிரிய நியமனங் களுக்கு உரிய தகைமை இல்லாதவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொட ர்பில் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்தார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்களினது முடிவைப் பெற்றுக்கொள்ள அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச பாடசாலை ஆசிரியர்களின் தொழில் சார் அபிவிருத்தியை மேம்படுத்த பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளதா? அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள நிலையங்களில் எவ்வளவு பேர் கல்வியிய லாளர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டுள் ளனர் என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்குத் தகைமை இல்லாதவர்களுக்கு கல்வி சேவையில் நியமனம் வழங்க முடியாது. இதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவும் முடியாத நிலையே உள்ளது. முன்பொரு சமயம் இதனை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனங்களுக் குள்ளாகியதையும் குறிப்பிட வேண்டும்.

எவ்வாறெனினும் விரும்பினால் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் அதன் பின் அது தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்துடன் முடிவொன்றைப் பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்த காலத்தில் அந்த சந்தர்ப்பத்தை சமாளிப்பதற்காக பதில் அதிபர்களை நாம் பாடசாலைகளுக்கு நியமித்தோம்.

அந்தச் செயற்பாடு எதிர் பார்த்த பலனைத் தரவில்லை. அவர்கள் மேலதிக சேவையாகக் கருதி அதனை சரிவர மேற்கொள்ளவில்லை. இதனால் இனிமேல் பதில் அதிபர்கள் நியமிக் கப்படமாட்டார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply