ஜனாதிபதியும் ரணிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – தேரர் கோரிக்கை
புதிய அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படக் கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பில் மாதுலுவே சோபித தேரருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply