சூடான் பஸ் விபத்தில் 38 பேர் பலி
சூடானின் ஒம்டுர்மன் நகரத்திலிருந்து, கோர்டோபான் மாநிலத்தின் தலைநகரான எல் ஒபைட் நகரத்தை நோக்கி பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. வோயிட் நைல் மாநிலத்தின் குடைனா நகரத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக வந்து கொண்டிரந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 38 உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனங்கள் இரண்டும் அதிவேகமாக வந்ததே இந்த விபத்து நடக்க காரணம் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் 25 வேகத்தைக் கண்காணிக்கும் கருவிகளை பொருத்த உள்ளதாகவும் அவர் கூறினர்ர்.
சூடான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பஸ்கள் சரியாக பராமரிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கு இதுவும் ஒரு காரணமாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம், இரண்டு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 33 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply