ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை நீடிப்பு
ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்த சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இவ்வாறு சந்தர்ப்பம் அளித்துள்ளது. மேலும் ஆறு மாத காலத்திற்கு ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில உதவிகளை வழங்கி வருகின்றது.
எனினும் இந்தியா இலங்கை சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான ஒர் பின்னணியில் ஏற்கனவே ஈரானிடமிருந்து பெருமளவு எரிபொருள் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அமெரிக்கா, கால அவகாசம் வழங்கியுள்ளது.
வேறும் நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் வரையில் ஈரானிடமிருந்து பொருட்களை கொள்வனவு தற்காலிக அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.
ஈரானிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவிடமிருந்து நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், சில காலம் வரையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஈரானிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்ய தற்காலிக அடிப்படையில் அனுமதியளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply