பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுக்கு மாறான பாதையில் இலங்கை செல்கிறது!
பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதற்கு மாறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கனடா விசேட பிரதிநிதி ஹியுஜ் சிகல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என கனேடிய பிரதமர் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த மாநாட்டில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி யார் பங்கேற்பது என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply