ஜேர்மனியில் வரலாறு காணாத வௌ்ள பெருக்கெடுப்பு
மத்திய ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. செக்கஸ்லோவேக்கியா நாட்டை பதம் பார்த்த வெள்ளநீர் தற்போது ஜேர்மனியை நோக்கி திரும்பியுள்ளது. செக்கஸ்லோவேக்கியாவில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு கருதி வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஜேர்மனியில் கடந்த 400 ஆண்டு கால வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பவரியன் நகரில் வெள்ள நீரின் அளவு 10 அடியை எட்டியுள்ளது. கூரை மீதேறி தஞ்சமடைந்துள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருகின்றனர்.
இந்த கடுமையான மழை வெள்ளத்திற்கு செக்கஸ்லோவேக்கியாவில் 9 பேர், ஜேர்மனியில் 4 பேர், அவுஸ்திரியாவில் 3 பேர் என ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.
காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வெள்ள நீர் வடியாவிட்டால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply