எக்னெலிகொடவை இலங்கைக்கு அழைத்து வருமாறு ஐதேக கோரிக்கை
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணன்டோவே மேற்கண்டவாறு கோரியுள்ளனர்.
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தமை மிகவும் பாரதூரமான அறிவிப்பாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்திக பெர்னாண்டோவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிநின்றார்.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொடஇ கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவர் தனது மனைவியுடன் பிரான்ஸில் இருப்பதாக ஆளுங்கட்சி எம்.பி அனுருத்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply