காணி, பொலிஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்

அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட சில பாரதூரமான அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. என்றாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லயிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட சில பாரதூரமான அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதை ஜாதிக ஹெல உறுமய வரவேற்கின்றது.

இருப்பினும் அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் முற்றாக இரத்துச் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply