வன்னிப் பகுதியில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் மக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு இணைத்தலைமைகள் ஆதரவு
வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக சிக்கித் தவிக்கும் பெருந்தொகையான அப்பாவி சிவிலியன்களை பாதுகாப்பாக வேறு பிரதேசங்களுக்கு இடம் நகர்த்த அமெரிக்கா உதவி வழங்கவுள்ளது. யுத்த பிரதேச சிவிலியன்களை இடம் நகர்த்துவது குறித்த அமெரிக்காவின் திட்டத்திற்கு இணைத்தலைமை நாடுகள் பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பசுபிக் படைப் பிரிவைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கக் கடற்படை மற்றும் வான் படை வளங்களைப் பயன்படுத்தி சிவிலியன்கள் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வட கிழக்கு கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கும் சிவிலியன்களைப் பத்திரமாக பாதுகாப்பதே முதன்மை நோக்கு என அமெரிக்க மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்படும் சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு இடைத் தங்கல் முகாம்களில் அல்லது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவுள்ளனர். அமெரிக்கப் படையினரின் இந்த மனிதாபிமான பணி குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப் பணிகள் எப்போது நடைபெறும் எனத் தெரிவிக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
சிவிலியன்களைப் பாதுகாப்பாக இடம் நகர்த்துவதற்கு மேலும் சில நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யுத்த பிரதேசத்திலிந்து சிவிலியன்களை வெளியேற விடாது தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தடுத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதி கட்ட மோதல்கள் நடைபெற்று வருவதனால் சிவிலியன்களைக் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட வேண்டும் அதேவேளை இதேபோன்ற மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இணைத் தலைமை நாடுகளின் இந்த நடவடிக்கை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply