ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தினுள் பிரவேசித்து இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி

நாட்டைத் துண்டாட முயற்சி செய்த புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டி இலங்கையை ஆசயாவின் அதிசயமாகக் கட்டியெழுப்பும் பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன் முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்து இன்றுடன் (07 ம் திகதி) 43 வருடங்கள் நிறைவடைகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மிக இளம் பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளஙகுகின்றார்.

ஆறு சகோதரர்களையும், மூன்று சகோதரிகளையும் உள்ளடக்கிய குடும்பத்தில் இரண்டாவது புதல்வராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். இவர் காலி ரிச்மண்ட், கொழும்பு நாலந்தா, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் கற்று சட்டக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.

றுஹுணுவின் சிங்கம் டி. எம். ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னோடி டி. ஏ. ராஜபக்ஷ ஆகியோரின் அடிச்சுவடுகளில் பயணிக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருந்து நாட்டுக்கு ஏற்கனவே அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நாட்டைச் சுமார் மூன்று தசாப்த காலம் சீரழித்த புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து பிளவுபடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்த நாட்டை ஒன்றுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டை ஆசியாவின் அதிசயமாகக் கட்டியெழுப்பும் வகையில் வேலைத் திட்டங்களை அவர் முன்னேடுத்து வருகின்றார். ஜனாதிபதி அவர்களின் தூர நோக்குமிக்க வேலைத் திட்டங்களின் பயனாக இலங்கை துரித அபிவிருத்திப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்தடிப்படையில் இலங்கையின் முதலாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம், முதலாவது அதிவேக நெடுஞ்சாலை, இந்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உள்ளிட்ட பல பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இந்நாடு பெற்றிருக்கின்றது.

இவ்வாறு பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தூர நோக்கின் அடிப்படையில் முன்னெடுத்து உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பிய பெருமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும்.

சுதந்திர இலங்கையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் மரியாதையையும், கெளரவத்தையும் பெற்ற ஒரே தேசத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்குகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply