அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது – மைக்கல் பெரேரா கேள்வி

யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அம்மக்கள் வாழ்ந்த இடங்களில் வாக்குரிமையை வழங்குவதை எதிர்க்கவில்லை. ஆனால் இவ்விடயத்தை விரிவாக ஆராயாது பேச்சுவார்த்தைகளை நடத்தாது அவசர அவசரமாக அரசாங்கம் ஏன் தேருநர்களை பதிவு செய்தல் விசேட சட்டமூலத்தை கொண்டு வருகின்றது என ஐ.தே.கட்சி எம்.பி.ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

தேருநர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது எதிர்க்கட்சி தரப்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா இக் கேள்வியை எழுப்பினார்.

அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இடம் பெயர்ந்தோர் தமது வாக்குரிமையை தமது பிரதேசங்களில் வாக்களிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியது. அதேபோன்று சிங்கள, முஸ்லிம் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இதே போன்று இடமளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுவல்ல இன்றைய முக்கியத்துவம் ஏன் இச்சட்ட மூலத்தை அவசரமாக கொண்டு வர வேண்டும். இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் மட்டுமல்ல நீர்கொழும்பிலும் வாழ்கின்றனர்.

எனவே இம் மக்கள் எங்கு வாக்களிப்பது. இலங்கை பிரஜைகளாக பதிந்தவர்கள் வெளிநாட்டில் இருப்பார்களேயானால் அவர்களுக்கு வாக்களிக்க முடியாது.

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிய குடியேற்றங்கள் இடம்பெறுகிறது. இவர்களுக்கு இச் சட்டமூலத்தால் வாக்களிக்க முடியும். வடக்கில் இடம்பெயர்ந்தவர்களும் மற்றும் புதிதாகவும் தெற்கிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் அப்படி புதிதாக வாக்காளர்களை பதிவது புத்தளத்தில் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு சென்று பதிய வேண்டுமா என்பதில் சிக்கல் உள்ளது. எனவே பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

எனவே தான் கேட்கிறேன் அவசரமாக ஏன் இந்தப் பிரேரணை கொண்டு வரவேண்டும். இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதை எதிர்க்கவில்லை.

யுத்தம் முடிந்து விட்டது. மக்கள் மீள் குடிறேற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அவ்வாறெனில் ஏன் அவசர பிரேரணை?. இன, மதங்களுக்கு ஏற்ப இனக்குழுமம் உள்ளது. எனவே எவ்வாறு இனகுழுமத்தின் மாற்றம் ஏற்படாத விதத்தில் தேருநர் இடாப்பில் பதியப்படும்.

இடம்பெயர்ந்த மக்களின் ஆரம்ப கால வாழ்விடம் உள்ளதா இல்லையா? இந்த நிலையில் எந்த விலாசத்தில் பதிவது வடக்கில் தேர்தல் நடத்தப்பட உள்ளமையினாலேயே அவசரமாக தேருநர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தை கொண்டு வருகிறீர்கள் என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply