இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீனா செயற்படாது

இலங்கையின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு மற்றும் சுயாதிபத்தியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சீனா துணைபுரியாது என மக்கள் சீனக் குடியரசின் உதவி பிரதமர் மா காய் கூறினார். சீனாவானது பழங்காலம் தொட்டே இலங்கையின் நெருங்கிய நண்பனாக இருந்து வருகின்றது. தாம் இலங்கையின் நட்பினை ஒருபோதும் மறக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (6) பிரதமர் தி.மு. ஜயரத்னவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பு சீனாவின் யுனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் சியபைலீபெ மியசனீலீஇல சிழவலீட இல் இடம்பெற்றது.

சீனாவின் சுயாதிபத்தியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய எந்தவாரு சந்தர்ப்பத்திற்கும் இலங்கை துணைபோகவில்லை. திபத் தாய்வான் மற்றும் தென் சீனத் தீவுகள் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இலங்கை ஒரு நிலையான கொள்கையினைப் பின்பற்றி சீனாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறிய உதவி சீனாவின் பிரதமர் ஐக்கிய மற்றும் பிளவுபடாத ஒரு சீனாவை கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமைக்கா இலங்கை அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு சீனா உதவுவதாகவும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இலங்கையின் மூலப் பொருட்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான சாத்திய வழிகள் பற்றிய ஆராய்வதாகக் கூறிய சீனாவின் உதவி பிரதமர் நேரடித் தொடர்புகள் மூலமாக இரு நாடுகளினதும் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் எனவும் கூறினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மூலோபாயங்கள் சம்பந்தமாக சீனா தனது தீவிர கவனத்தைச் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 15 வருடங்களாக சீன இலங்கை நட்பு புதியதொரு திருப்பத்தினை அடைந்துள்ளது. இலங்கையின் பிரதான அபிவிருத்தித் திட்டம் சீனாவின் மதிப்பீட்டுக்கு உட்பட்டுள்ளது. ஆசியாக் கண்டத்தின் தென் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கை சீனாவின் நண்பன் எனவும் சீன உதவி பிரதர் அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் தி.மு. ஜயரத்ன இங்கு கருத்துத் தெரிவிக்கையில், 4 ஆம் நூற்றாண்டில் பாஹியன் பிக்கு சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் ஆரம்பமானது. இந்த பிணைப்புக்குக் காரணம் பெளத்த தர்மம் ஆகும். எஸ். டப்ளிவ். ஆர். டி பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற அரச தலைவர்கள் சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும் கூறிய பிரதமர் இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கு சீனாவின் உதவி அத்தியாவசியமெனக் கூறினார். 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கும் இலங்கை அதில் சீன நாட்டவரின் வருகையையும் முக்கியமாக எதிர்பார் க்கின்றது.

30 வரு கால யுத்தத்தின் பின்னர் இலங்கை புதியதொரு திருப்பத்தினை அடைந்துள்ளதெனவும் அதன் முன்னோடி ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எனவும் பிரதமர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply