வடக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன – பாஜக
வடக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றமையை நாம் ஊர்ஜிப்படுத்திக் கொண்டுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசை தெளிவுபடுத்துவதுடன் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரிடம் எடுத்துரைப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளரும் பிரதி தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறுகையில்,
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினரை நேற்று முன்தினம் மாலை சந்தித்தோம். வடக்கில் தமிழர்களின் காணி அபகரிக்கப்படல் மற்றும் அரசியல் தீர்வில் காணப்படும் நெருக்கடிகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசினோம்.
அவற்றை ஏற்றுக்கொண்ட இந்திய தூதுக்குழு யாழ்ப்பாணத்தில் கேட்டறிந்து கொண்ட விடயங்களும் கூட்டமைப்பின் கருத்துகளும் ஒன்றுபடுவதாகவே உள்ளது. குறிப்பாக வடக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளோம் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இவற்றை இந்தியாவில் எடுத்துரைப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply