பொதுநலவாய மாநாடு தொடர்பில் உலக தலைவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது தொடர்பில் உலகத் தலைவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும், வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த தீர்மானம்த்தை உலகத் தலைவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

17ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதன் மூலம் வடக்கில் நீதியானதும், சுயாதீனமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் பங்கேற்றால் அது, சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொள்வதாகவே அர்த்தப்படும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply