அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 7 பேர் பலி

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் தேர்தலையொட்டி சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்த தாக்குதல் கடந்த மாதம் 29ம் திகதி மீண்டும் தொடங்கியது.

வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் துணை தலைவன் வலியுர் ரஹ்மான் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பாராளுமன்றத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், ‘பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தும் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் நேற்று மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

ஷவால் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலில் தேடப்படும் முக்கிய தீவிரவாதி உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்ட அந்த முக்கிய புள்ளி யார்? என்ற பெயர் விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply