புதுக்குடியிருப்பு நகரப்பகுதியை இராணுவம் முற்றுகையிட்டிருப்பதாகத் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது
முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு நகரப்பகுதியை இராணுவம் முற்றுகையிட்டிருப்பதாகத் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே படையினர் வசமாகியுள்ள பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த விடுதலைப்புலிகள் குழுவொன்றுடன் வற்றாப்பளை பகுதியிலும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக அது கூறியிருக்கின்றது.இந்தச் சண்டைகளின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் 5 சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே முன்னேறிய இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலுக்கு மத்தி்யிலும் கோம்பாவில் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகள் அமைத்துள்ள பாரிய மண் அரணின் ஒரு பகுதியைச் சென்றடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இங்கு நடைபெற்ற சண்டைகளின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் 3 சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதனிடையில், கிழக்குக் கரையோரத்தின் புல்மோட்டை கடற்படைத்தளப் பிரதேசத்திற்கு 12 சிவிலியன்கள் கடற்படையினரிடம் வந்துசேர்ந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply