தனியார் பஸ் உரிமையாளரிடம் கப்பம்: உயர்மட்ட பொலிஸ் அதிகாரியின் மகன் உட்பட மூவர் கைது
தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கப்பம் பெற்று வந்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் உட்பட மூவரைப் பொலிசார் நேற்றுக் கைது செய்தனர்.
இது தொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தகவல் தருகையில், கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவரும் ராகமையைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் ஐந்து இலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இவர்கள் இவ்வாறான கப்பம் பெறும் நடவடிக்கைகளிலீடுபட்டு வந்தனரா என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் திணைக்கள இலட்சினை பொறிக்கப்பட்டு பொலிஸ் அத்தியட்சகர் என்ற வார்த்தையுடன் காணப்பட்ட தனியாருக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றை கல்கிஸ்ஸ பொலிசார் கைப்பற்றினர்.
பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அதே வழியால் சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றில் பொலிஸ் இலட்சினையும் வாசகமும் காணப்பட்டமையில் சந்தேகம் கொண்ட அவர்,கல்கிஸ்ஸ பொலிசாருக்கு பிறப்பித்த உத்தரவையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிசார் குறிப்பிட்ட ஜீப்பைக் கைப்பற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply