சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்கான பிரணாப் முகர்ஜி இலங்கை வருகின்றார்
கொழும்பில் நடைபெறவுள்ள இருநாள் சார்க் வலய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்கான இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.
கொழும்பில் 27ம், 28ம் திகதிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் நடைபெறவுள்ள சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே அவர் வருகைதரவுள்ளார் என்று வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.
வலய நாடுகளுக்கு இடையில் பயங்கரவாதத்தை தோற்கடித்தல், பொருளாதார, அரசியல் மற்றும் அபிவிருத்தி துறைகளை மேம்படுத்தல் தொடர்பில் மகாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வுள்ளர்கள்.
இதேவேளை மாநாட்டு முடிவடைந்ததன் பின்னர் சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்ற போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதுடன் வடக்கின் தற்போதைய நிலைமை மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply