தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னிந்தியாவைத் தாக்கலாம் :இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் தினசரி ஒன்றுக்கு நேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தமது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் தென் மாநிலப் பிராந்தியத்தின் மீது சிவிலியன்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென இந்தியா திட்டவட்டமான தனது முடிவைத் தெரிவித்து விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மட்டுமே இந்திய அரசாங்கம் இலங்கை அரசைக் கேட்டுள்ளது.

தம்மிடமிருந்த விமானங்களை இழந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் குன்றிவிட்டது. அவர்களின் ஏழு விமான ஓடு பாதைகளையும் படையினர் கைப்பற்றி விட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்ந்தும் வன்னியிலிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply