எஞ்சியுள்ள ஒரேயொரு பகுதியான புதுக்குடியிருப்பு பகுதியில் கடும் மோதல்.

வடக்கே விடுதலைப்புலிகள் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு பகுதியான புதுக்குடியிருப்பு நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் இரு முனைகளில் இணைந்து சுற்றி வளைத்துள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகம் கூறியுள்ளது.

இந்த நகரத்தை இராணுவத்தினர் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்து முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் இராணுவ தலையைகம் தெரிவித்திருக்கின்றது.

இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கடும் சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் எட்டு சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் படையினர் தொடர்ந்து தேடுதல் நடத்திவருவதாகவும், இந்தத் தேடுதல்களில் பெருந்தொகையான விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு விபரம் வெளியிட்டிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply