புலிகளின் பாரிய முகாம், ஆயுத கிடங்கு புதுக்குடியிருப்பில் படையினர் வசம்
புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் அங்குள்ள புலிகளின் பாரிய முகாம் மற்றும் ஆயுதக் கிடங்கு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படைப் பிரிவினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் அந்த பாரிய முகாமையும், பாரிய ஆயுதக் கிடங்கையும் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னேறிச் சென்ற இராணுவத்தினர் இந்த முகாமையும், ஆயுதக்கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர்.
வன்னி மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் வசமிருந்த பாரிய முகாம்களையும், பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்த போதிலும், இதுவரை காலம் கைப்பற்றப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலான கனரக ஆயுதங்களைக் கொண்ட பாரிய முகாம் இதுவாகும் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
பெரும் எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்கள் முதற் தடவையாக மீட்டெடுக்கப்பட்ட பிரதேசம் புதுக்குடியிருப்பு என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 120 மி. மீ. ரக கனரக மோட்டார் – 03, 81 மி. மீ. ரக மோட்டார்கள் – 45, 60 மி. மீ. ரக மோட்டார்கள் – 43, கொமோண்டோ மோட்டார் – 25, 60 மி. மீ. ரக மோட்டார்களுக்கு பொருத்தப்படும் குழல்கள் – 14, தகடுகள் – 35, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் – 800, பெருந்தொகையான ரி – 56, ரி – 81 ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான உபகரணங்களையும் இந்த முகாமிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிகளின் பாதுகாப்பு அரண்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படையினரின் கடுமையான தாக்குதல்களில் கொல்லப் பட்ட எட்டு புலிகளின் சடலங்களையும், ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, தொலைத் தொடர்பு கருவி – 01, ஆர். பி. ஜி. குண்டு – 02, கிளேமோர் குண்டுகளையும் மீட் டெடுத்துள்ளனர். இதுதவிர புதுக்குடியிருப்பு வடக்கு பகு தியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரங் கள் மூன்றையும் இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைக் குண்டுகள் – 300, உழவு இயந்திரம் – 01, ட்ரக் வண்டி – 01, மோட்டார் சைக்கிள் – 01, ஜெனரேட்டர்கள் – 02, தண்ணீர் பம்புகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply