புலிகளின் பிடியிலிருந்து 38 ஆயிரம் பேர் தப்பி வந்துள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையில் 38 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் (பெப். 24) 106 பொது மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். படகினைப் பயன்படுத்தி 56 பேர் பருத்தித்துறை கடற்படை முகாமை வந்தடைந்ததாகவும் இவர்களில் 21 ஆண்கள், 18 பெண்கள், 17 சிறுவர்கள் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். மேலும் 50 பேர் ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியை நேற்று (பெப். 24) மாலை வந்தடைந்து உள்ளதாகவும் இவர்களில் 13 ஆண்கள், 14 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply