இந்தியாவின் நிவாரணங்கள் அனைத்தையும் நாம் ஏற்போம்:அமைச்சர் மஹிந்த சமரசிங்க
இந்திய அரசினால் வழங்கப்படும் எந்தவிதமான நிவாரணப் பொருட்களும் முன்னரைப்போல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மோதல் பிரதேசத்தில் காயமுற்று இடம்பெயர்ந்து வருவோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவிலிருந்து மருத்துவர்களையும், மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இடம்பெய ர்ந்துள்ள மக்களுக்காக இந்தியா வழங்கும் நிவாரணங் களை முன்பு ஏற்றுக்கொண்டதைப் போல், இம்முறையும் ஏற்கத் தயாரெனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்தியப் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த மருத்துவ நிவாரண உதவி பெற்றுக்கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நிவாரண உதவியை வரவேற்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு விநியோகி க்கவென நிவாரணப் பொருள்களைச் சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, கட்சியின் தென் மாநிலப் பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். சேகரிக்கப்படும் பொருள்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளையும் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply