ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் : ஒபாமா

ஒபாமா அமெரிக்க அதிபர் ஆன பிறகு முதல் முதலாக அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது :-

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை கொடுத்து வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகிறது.இன்னும் 2 ஆண்டில் 35 இலட்சம் வேலைகள் உருவாக்கப்படும். அல்லது பாது காக்கப்படும். எனவே அமெரிக்கர்களுக்கு ஏற் பட்ட வேலை இல்லா திண்டாட்டம் முற்றி லும் நிவர்த்தி செய்யப்படும்.

பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கிய பணம் மக்களுக்குத் தான் பயனைத் தரும். வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ இந்தப்பணம் போய்ச்சேரலாம்.

அமெரிக்காவை நாம் மறு நிர்மாணம் செய்கிறோம். சரிவை மீட்கிறோம். இதை எல்லா மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த தீவிரவாதிகளையும் நாம் விட்டுவைக்க மாட்டோம்.

எந்த தீவிரவாதிகளும் இனி அமெரிக் காவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளில் வசிக்கும் அமெரி க்கர்களுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து வரவிட மாட்டோம்.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் முற்றி லும் ஒழிக்கப்படுவார்கள். இதற்காக கூட்டணி நாடுகளோடு சேர்ந்து புதிய அணுகு முறையை கையாளப் போகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் எண்ணிக்கை விரிவு படுத்தப்படும் என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply