கொழும்பிற்கும் வவுனியாவுக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுவரும் யாழ் தேவி தாண்டிக்குளம் வரை செல்கிறது

கொழும்பிற்கும் வவுனியாவுக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுவரும் யாழ் தேவி புகையிரதம் இந்த மாத இறுதியிலிருந்து தாண்டிக்குளம் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாப் பல புகையிரதத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் வவுனியாவுக்குச் சென்று ஆராய்ந்திருப்பதாகத் தெரியவருகிறது.

இதற்கமைய தாண்டிக்குளம் வரை புகையிரதப் பாதையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்திருப்பதாக வவுனியா புகையிரதத் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

யாழ் தேவி புகையிரதத்தின் சேவைகள் பல வருடங்களாக கொழும்பிலிருந்து வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து புகையிரத சேவைகளை தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் வரையில் புகையிரதப் பாதைகள் சீர்திருத்தப்படவிருப்பதுடன், தாண்டிக்குளம் புகையிரத நிலையமும் மீள்நிர்மானம் செய்யப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

அதேநேரம், இந்த விடயம் தொடர்பாக புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று நாளை வெள்ளிக்கிழமை வவுனியா சென்று ஆராயவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply