இந்திய மருத்துவக்குழு இலங்கை வரவுள்ளது.
வன்னியிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லும் காயமடைந்த பொது மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென இந்திய மருத்துவக் குழு இலங்கை வரவுள்ளது. இந்திய மருத்துவக் குழுக்கள் இலங்கை வருவது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மருத்துவக் குழுவிலும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களென 10 பேர் முதல் 12 பேர் வரையில் இருப்பார்களென்பதுடன், எத்தனை மருத்துவக் குழுக்களை சேவைக்கு அழைப்பதென்பது, இலங்கையின் வேண்டுகோளைப் பொறுத்தே அமையுமெனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பெரும்பாலும் தமிழ் பேசும் தகைமையுடையவர்களே இத்தகைய மருத்துவ அணிகளில் இடம்பெற்றிருப்பர் எனத் தெரிகிறது. அவர்கள் முதலில் திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களுக்கு போரில் சிக்கிக் காயமடைந்த நிலையில் மீட்கப்படும் பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுவரப்படும் இடங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறப்படுகிறது. உரிய மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருள்கள் போன்றவற்றையும் இக்குழுவினர் இந்தியாவில் இருந்தே தம்முடன் எடுத்துவருவர் என்றும் தெரிகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை அளிப்பதற்காக மருத்துவக் குழுக்களையும் மருந்துகளையும் விரைந்து அனுப்பி உதவுமாறு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்திய மத்திய அரசை அண்மையில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply