ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவது நியாயமற்றது :யாப்பா
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் குறைவின்றி செய்துகொண்டுள்ள இத்தருணத்தில் ஆதாரமற்ற இணையத்தளங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.
மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட பலர் நேரடியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
பயங்கரவாதிகள் யார்? பொதுமக்கள் யார்? என்பது தொடர்பாக பிரித்தறிந்தவாறே படையினர் செயற்படுகின்றனர்.
ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி எமது மனிதாபிமான நடவடிக்கைக்கு தவறான கருத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்போதே நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply