இந்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தி, அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல்

இந்த வருடம் பொதுத் தேர்தலை நடத்தி, அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்தப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறுப்படுகிறது. எனினும், ஜனாதிபதித் தேர்தலையா அல்லது பொதுத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பதில் அரசாங்க உறுப்பினர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இராணுவ வெற்றிகளால் அரசியல் தீர்வொன்றுக்கான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியமிருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூறுவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட பலர் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கூறிவருவதாகவும், இந்த விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணங்க வைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தென் மற்றும் ஊவா மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply