எமது அமைப்பில் சிறுவர் எவரும் இல்லை : கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தகவல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போதைக்கு சிறுவர் போராளிகள் எவரும் இல்லை என அதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பாக யுனிசெப், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு அதற்கான வேலைத் திட்டமொன்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இந்த வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா இது பற்றி தெரிவிக்கையில்,

“எமது அமைப்பிலிருந்த சிறுவர் போராளிகள் சகலரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனை அவர்களுடைய பெற்றோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

அதே வேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

தமது அமைப்பிலுள்ள உறுப்பினர்களைத் தொழிற் பயிற்சி வழங்கி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகளில் இணைய விரும்புவோர் அவர்களது தகுதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply