புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளார்.
புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு முதல் 58 வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளதாக புலிகளின் தொலைத் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொட்டம்மான் போரை வழிநடத்துவதன் மூலம் புலிகளின் வீழ்ச்சி தெளிவாகியுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று வரை மோதல்களை நெறிப்படுத்தியுள்ளார். 58வது படைப்பிரிவினரின் தாக்குதல்களில் 18 புலிகள் உயிரிழந்தாகவும் அவற்றில் 4 சடலங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் 4வது அதிரடிப்படைப் பிரிவினர் 58வது படைப்பிரிவினர் முன்னேறி செல்லும் வகையில் களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் அதிகாரத்தை உறுதிப்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. 58வது படைப்பிரிவு மற்றும் 8வது இராணுவ அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு நகரை சுற்றிவளைத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply