தப்பி வந்தோர் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு; இரு சிறார்கள் உட்பட நால்வர் படு காயம்.
இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்புப் பகுதியில் புலிகள் பிடியில் சிக்கியிருந்த 10 ஆண்களையும் 9 பெண்களையும் நேற்று (பெப். 26) மீட்டுள்ளதாக பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதியை நோக்கி இப் பொதுமக்கள் வருகையில் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இரு சிறார்கள் உட்பட நால்வர் படுகாயமுற்றதாகத் தப்பி வந்தவர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தகவல் தருகையில் புலிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதியை நோக்கி வருவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் ஆனால் புலிகள் தப்பிவர முயற்சிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதால் மக்கள் வெளியேறத் தயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
புலிகள் தப்பி வந்துள்ள பொதுமக்கள் மீது `சினைபர்` தாக்குதல்களும் நடத்துவதாக பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கியதில் மூன்று இராணுவத்தினரும் காமடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகள் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள பொதுமக்களுக்கு களத்திலுள்ள விசேட மருத்துவப் படையினர் உடனடி மருத்ததுவ உதவிகள் வழங்கியதுடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக படை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply