தமிழ்நெற் வெளியிட்டது பொய்யான தகவல் : விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார
இலங்கை விமானப் படையினரின் எந்த விமானங்களும் இன்று புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நெற்றில் வெளியான செய்தியையடுத்து, விமானப்படைப் பேச்சாளரை வீரகேசரி தொடர்பு கொண்டு கேட்ட போது, `அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை. அத்துடன் விமானப்படையினர் இன்று (பெப். 27) வான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இது பொய்யான தகவல்` என அவர் தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகவல் குறித்து சர்வதேச ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நெற் வெளியிட்ட `தகவல்` இன்னொரு `கல்மடு`வாககக் கூட இருக்கலாம் என்றார் கொழும்பில் உள்ள செய்தியாளர் ஒருவர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply