புலிகள் தம்மிடமிருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்தால் நாடு பாரிய அழிவைச் சந்திருக்கும் :அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்று வரும் மோதல்களின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் பிரதேசங்களிலிருந்து படையினரால் பாரிய ஆயுதங்களும் பெருந்தொகையான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று  தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பாரிய ஆயுதங்களில் 27 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அவர்களிடமிருந்த பாரிய ஜெனரேட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த பல ஆயுதங்கள் புதியனவாகவே காணப்பட்டன. இவற்றைப் புலிகள் பாவித்திருந்தாலும் பாரிய அழிவுகளுக்கு நாடு முகங்கொடுத்திருக்க வேண்டி இருந்திருக்கும். இது போன்றே பயங்கரவாதத்துக்கெதிராகப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டிருந்தாலும் பல்வேறு அழிவுகளை நாடு சந்தித்திருக்கும்.

புலிகள் அண்மையில் நடத்திய விமானத் தாக்குதலானது அவர்களது இறுதிக் கட்ட தற்கொலைத் தாக்குதலாகும்.

சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான என். வித்தியாதரனை சீருடையில் வந்த பொலிசாரே கைது செய்தனர்.

கடந்த 20 ஆம் திகதி விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பில் பொலிசாருக்குக் கிடைத்த சில தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலேயே அவரை விசாரணைக்கென பொலிசார் அழைத்துச் சென்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply