விடுதலைப் புலிகள் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்:பிரிகேடியர் உதய நாணயக்கார
வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்கு பாரியளவில் முகங்கொடுத்துள்ளது. வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போது பெருமளவிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ள அதேசமயம் பாரியளவிலான ஆயுதங்கள் மற்றும் அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் போன்றன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பின்னணியின் பிரகாரம் புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட புலிகளின் அனைத்து சிரேஷ்ட தலைவர்களும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டுவரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்பிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply