ஹிலாரி கிளின்டன் அடுத்த வாரம் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்
அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளார்.மார்ச் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை கிளின்டன் வெளி நாடுகளில் தங்கவுள்ளார். முதலில் மத்திய கிழக்கிற்கு செல்லும் அவர் எகிப்து, இஸ்ரேல், பாலஸ் தீனம் என்பவற்றுக்கும் பின்னர் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் செல்வார்.
எகிப்தில் மார்ச் 02 இல் நடைபெறும் காஸா புனர மைப்பு மாநாட்டில் பங் கேற்கும் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கைத் தனிமையாகச் சந்திப்பார். இந்த மாநாடு அரபு – இஸ்ரேலுக்கான ஐ. நா.வின் சமாதானப் பேச்சாளர் ஜோர்ஜ் மைகலின் தலைமையில் நடைபெறும்.
ஹமாஸ், பதாஹ் அமைப்பினரிடையே ஐக்கிய பாலஸ்தீனம் உருவாக்க இணக்கம் காணப் பட்டுள்ள நிலையிலும் காஸா வைப்புனரமைக் கும் மாநாடு நடை பெறுகின்றமை கவனத்திற் குரியது. 2.8 பில்லியன் டொலர் பணம் காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ளது. 900 மில்லியன் டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply