தென் பகுதியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும்:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன
விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதால் தென்பகுதியிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தென்பகுதியில் வதந்திகளைப் பரப்பி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
இரண்டு விமானங்களைப் பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்த முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தற்பொழுது நம்பிக்கைய இழந்திருப்பதாக அமைச்சர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
அரசாங்கத்தின் மனிதநேய நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தென்பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வன்முறைகளை ஏற்படுத்தி மோதல்களை மேலும் சில வருடங்களுக்கு நீடிக்கச் செய்ய அரசாஙக்ம் முயற்சிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் ஜீவ் வண்டியில் மாத்திரம் வரவேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், தாம் விரும்பிய எந்த வாகனத்திலும் அவர்கள் வரமுடியும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply