புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர ஏனைய தலைவர்கள் அனைவரும் போரில் ஈடுபட்டுள்ளனர்: பாதுகாப்பு தரப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தவிர அந்த அமைப்பின் ஏனைய தலைவர்கள் அனைவரும் தமது இறுதி கோட்டையை தற்காப்பதற்காக போரில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தமது இறுதி கோட்டையை தற்காப்பதில் கடும் முனைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை படையினர் மூன்று படையணிகள் புதுக்குடியிருப்பு நகரத்தை கைப்பற்றும் நோக்கில் இதுவரை முன்னோக்கி நகர்ந்துள்ளதுடன் இந்த படையினருக்கு மேலதிகமாக மற்றுமொரு படையணியை களத்தில் இறக்கியுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

58, 53 படைப்பிரிவுகள், இராணுவத்தின் 4வது மற்றும் 8வது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு நகரை சுற்றிவளைத்து புலிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் முக்கிய தளபதிகளான தீபன், பானு, சொர்ணம், ஜெயம், ஆதித்தியன் உள்ளிட்டோர் புதுக்குடியிருப்பை தற்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல்களின் போது 58வது படைப்பிரிவினரின் தாக்குதலில் புலிகளின் இரண்டாம் நிலை தளபதியான சங்கர் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளை 58 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கியுள்ளதாகவும் புலிகளின் இறுதி கோட்டையை கைப்பற்றும் நோக்கில் படையினர் தமது தாக்குதல்களை வேகப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply