வித்தியாதரன் குறித்து 40 ஊடகவியலாளர்களிடம் விசாரணை

குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுடர்ஒளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவினர் 40ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  
 
கொழும்பு குற்றப்புலன் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பல பத்திரிகை நிறுவனங்களுக்குச் சென்று சுடர்ஒளி பத்திரிகையுடன் தொடர்புவைத்துள்ளவர்களை விசாரணை நடத்தியிருப்பதாக சண்டேடைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சுடர்ஒளி பத்திரிகையாசிரியர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டதாகக் குற்றஞ்சாட்டியே கைதுசெய்யப்பட்டதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட அழைப்பை மையமாகக் கொண்டே விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறியிருப்பதாகவும் சண்டேடைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
சுடர்ஒளி மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply