சிறுவர்களை கட்டாய ஆள்பிடிக்க முயன்ற புலிகளின் துப்பாக்கியை பறித்து பொதுமக்கள் சுட்டதில் 3 புலிகள் மரணம்.

சிறுவர்களை வற்புறுத்தி படையில் சேர்க்கும் முயற்சியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அங்குள்ள சில சிறுவர்களை கொண்டு செல்ல முற்பட்டபோது புலிகளுக்கும் சிறுவர்களின் பெற்றோருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அம்முறுகல் முற்றி புலிகள் பெற்றோரை தாக்குவதை அவதானித்த பாதுகாப்புப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பலர் சேர்ந்து புலிகளைத் தாக்கியதோடு புலிகள் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பறித்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி துப்பாக்கிச் பிரயோகத்தில் சிறுவர்களை படையில் சேர்க்க வந்திருந்த மூன்று புலிகளும் கொல்லப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியை பறிக்கும் சமரின் போது புலிககளின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி சம்பவத்தை பாதுகாப்புப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புலிகள் முல்லைத்தீவில் பாதுகாப்பு பிரதேசத்தில் உள்ள சிறுவர்களைக் கூட தமது அழிவு யுத்தத்திற்கு தொடர்ந்தும் பலாத்காரமாக சேர்த்து வருவதை மக்கள் இனியும் எவ்வளவு காலத்துக்கு பொறுக்கத்தான் முடியும்?

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply