யாழ்ப்பாணம் – கண்டி வீதி ஏ-9 இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படும் : பிரிகேடியர் உதய நாணயக்கார

யாழ்ப்பாணம்- கண்டி A-9 வீதி இன்று  உத்தி யோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

24 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்காகவும், விநியோக நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதை இன்று திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில், 1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஏ-9 வீதியை பாதுகாப்பு படையினர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாதுகாப்பு படையி னரின் மனிதாபிமான நட வடிக்கைகள் மூலம் A-9 வீதியிலுள்ள பிரதான நகரங்களான பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு என் பன புலிகளின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டன.

இதன் பயனாக A-9 தரைவழியைத் திறந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு படையி னரின் தரைவழி போக்கு வரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இப் பாதை முதலில் திறக்கப் படுகின்ற போதிலும் இப்பாதைக்கு அருகிலுள்ள சில பிரதேசங்களில் புதை க்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் பூர்த்தியா னதும் பொது மக்கள் போக்குவரத்துக்காகவும் இப்பாதை திறந்துவிடப்படும்.

2002ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட உடன்படி க்கை மூலம் A-9 வீதி பொது மக்கள் போக்கு வரத்துக்காக மட்டுப்படுத்த ப்பட்ட அளவிலேயே திறக்கப்பட்டது.

பொது மக்கள் புலிகளுக்கு வரி என்ற போர் வையில் கப்பம் செலுத்தி மிகுந்த சிரமங்களுடனேயே இப்பாதை வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டனர்.

இச்சமயம் பாதுகாப்பு படையினர் இப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் ஆகாய மற்றும் கடல் வழியாகவே யாழ். குடா நாட்டுக்கான போக்குவ ரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இப்பாதை திறக்கப் படுவதன் மூலம் பாது காப்பு படையினர் பெரி தும் நன்மை பெறுவது போல யாழ்ப்பாணம் உட்பட முழுநாட்டு மக்களும் நன்மை அடைவர்.

இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்துறை பெரிதும் மேம்பாடு அடையும்.

இப்பாதையை உத்தி யோகபூர்வமாகத் திறக்கும் வகையில் யாழ்ப்பாணத்தி லிருந்து வவுனியா நோக்கி ஒரு இராணுவ குழுவினரும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மற்றொரு இராணுவ குழுவும் இன்று பயண த்தை முதலில் ஆரம்பிக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply