லிபியாவில் ராணுவ உளவுத்துறை தலைமை அதிகாரியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்

லிபியா தலைநகர் பென்காசியின் ராணுவ உளவுத்துறை தலைமை அதிகாரியாக பொறுப்பு வகித்தவர், ஃபெத்தல்லா அல்-கசிரி.சமீபத்தில் இந்த பதவியில் நியமிக்கப்பட்ட இவர், டெர்னா என்ற பகுதியில் நடைபெற்ற உறவினரின் குடும்ப திருமண விழாவில் நேற்று பங்கேற்றார்.அப்போது, திருமணம் நடந்த இடத்திற்குள் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சிலர் நுழைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இயந்திர துப்பாக்கிகளால் ஃபெத்தல்லா அல்-கசிரியை நோக்கி அவர்கள் சரமாரியாக சுட்டனர். உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில், ஃபெத்தல்லா அல்-கசிரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் விளைவாக முவம்மர் கடாபி அதிபர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரவாதிகளின் அட்டூழியம் பெருகிக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, ராணுவம் மற்றும் அரசு துறையை சேர்ந்த உயரதிகாரிகள், நீதிபதிகள்,அரசியல்வாதிகள், ஊடக துறையை சேர்ந்தவர்கள், லிபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஆகியோரை தீவிரவாதிகள் குறிவைத்து கொன்று குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply