தெற்கு சூடானில் உள் நாட்டு போர்: அமெரிக்க போர் விமானம் மீது புரட்சிபடை தாக்குதல்
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீருக்கு எதிராக புரட்சி படை களம் இறங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ராணுவத்துடன் கடும் சண்டை நடந்து வருகிறது. தற்போது இது உள் நாட்டு போர் ஆக மாறியுள்ளது. எண்ணை வலம் மிக்க ஜோங்லி மாகாணத்தில் உள்ள போர் என்ற நகரம் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவே அங்கு ராணுவத்துக்கும், புரட்சி படைக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ளது.எனவே, அமெரிக்கா தெற்கு சூடானில் வாழும் தன் நாட்டு மக்களை திரும்ப அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்கள் தெற்கு சூடானுக்கு விரைந்தன.
அவை புரட்சி படையினரின் பிடியில் உள்ள போர் நகரில் தரை இறங்க முயன்றது. அதை பார்த்த புரட்சி படையினர் அமெரிக்க போர் விமானங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்கினர்.
அதில், ஒரு போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் சேதம் அடைந்தது. அதில் இருந்து பெட்ரோல் கசிந்தது. உடனே, போர் விமானங்கள் தெற்கு சூடானின் போர் நகரின் எல்லையில் உள்ள உகாண்டாவுக்கு திரும்பி சென்றன.
புரட்சி படையினரின் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply