தெரிவுக்குழு பக்கச் சார்பானதல்ல கூட்டமைப்பு தெரிந்து கொள்ளலாம் : தினேஷ் குணவர்த்தன

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இணைந்­து­கொள்­வ­தற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­ கு­ழுவில் தற்­போது அங்கம் வகிக்கும் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தெரி­வுக்­கு­ழுவின் நம்­ப­கத்­தன்மை, நேர்மை மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை தொடர்பில் தெரிந்­து­கொள்ள முடியும் என்று ஆளும் கட்­சியின் பிர­தம கொர­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேர்­மை­யான முறையில் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட எதிர்க்­கட்­சிகள் அர­சாங்­கத்­துடன் இணைந்து புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப தமது பங்­க­ளிப்பை வழங்கும் என்று எதிர்­பார்ப்­ப­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

31 பேர் கொண்ட பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு 14 பிர­தி­நி­தி­க­ளுக்­கான இடங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் தெரி­வுக்­குழு பக்­கச்­சார்­பா­னது என்று கூறவே முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கான ஜனா­தி­ப­தியின் அழைப்புத் தொடர்­பிலும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் குறித்தும் தகவல் வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நேர்­மை­யான முறை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்ளார். எனவே புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட எதிர்க்­கட்­சிகள் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து செயற்­படும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

எதிர்க்­கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த காலங்­களில் இணைந்து செயற்­பட்­டு­வந்­துள்ளார். குறிப்­பாக தனக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்கள் தனது பத­விக்கு சவால்­விட்­ட­வர்கள் என அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போது இணைந்து செயற்­பட்­டு­வ­ரு­கின்றார்.

அனைத்து மக்­க­ளி­னதும் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பதில் ஜனா­தி­பதி
அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றி­வ­ரு­கின்றார். குறிப்­பாக நாட்டின் ஏனைய மாகா­ணங்­களை விட வட மாகா­ணத்தின் அபி­வி­ருத்­தியில் ஜனா­தி­பதி அதிக அக்­கறை செலுத்­தி­யுள்ளார். வட மாகா­ணத்தின் அபி­வி­ருத்­திக்­காக அதிக நிதியை ஜனா­தி­பதி ஒதுக்­கி­யுள்ளார்.

இதே­வேளை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காணும் நோக்கில் அர­சாங்கம் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­துள்­ளது. அந்தத் தெரி­வுக்­கு­ழு­வா­னது எவ்­வ­கை­யிலும் பக்­காச்­சார்­பா­னது அல்ல . அவ்­வாறு பக்­கச்­சார்­பா­னது என்று கூறு­வதை ஒரு­போதும் ஏற்க முடி­யாது.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட எதிர்க்­கட்­சிகள் இடம்­பெ­ற­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.
அதா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் மீது நம்­பிக்கை இல்­லா­விடின் தெரி­வுக்­கு­ழுவின் பிர­தி­நி­தி­க­ளுடன் அவர்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம். அவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடத்தி நிலை­மையை அறிந்­து­கொள்ள முடியும்.

கூட்­ட­மைப்பு நம்­ப­கத்­தன்மை மற்றும் நேர்மை குறி்த்து பேசு­கின்­றது. அப்­ப­டி­யாயின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இணைந்­து­கொள்­வ­தற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் தற்­போது அங்கம் வகிக்கும் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி நம்­ப­கத்­தன்மை மற்றும் நேர்மை வெளிப்­ப­டைத்­தன்மை தொடர்பில் தெரி்ந்­து­கொள்ள முடியும்

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வா­னது பக்­கச்­சார்­பா­னது என்று கூறு­வதை ஒரு­போதும் ஏற்க முடி­யாது. பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு 31 உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். அதில் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு 14 இடங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆளும் கட்­சிக்கு பெரும்­பான்மை பலம் பாரா­ளு­மன்­றத்தில் இருந்தும் இவ்­வாறு எதிர்க்­கட்­சி­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதனை பக்­கச்­சார்­பா­னது என்று ஒரு­போதும் கூற முடி­யாது.
பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யுடன் வரலாம். தற்­போது அவர்­க­ளுக்­கான ஆச­னங்கள் வெறு­மை­யா­கவே உள்­ளன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply